வடக்கு மாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம்
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நேற்றுமுன்தினம் (19) நிறைவடைந்தது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தலைமையில் இந்த முகாம் நிறைவுறுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
பயிற்சிகள்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாண ஆளுநரும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதுவரும் செயற்கை அவயங்கள் தயாரிக்கும் முறையினை பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து செயற்கை அவயங்கள் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கு மாகாணத்தை சேர்ந்த 352 மாற்றுத் திறனாளிகளுக்கு 366 புதிய செயற்கை அவயங்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளதுடன் அவற்றை பராமரிக்கும் முறை தொடர்பான பயிற்சிகளும் இந்த விசேட முகாம் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.