வடக்கு சுகாதார சேவை ஆளணி வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் வெளியான தகவல்
வடக்கு மாகாணத்தில் ஆரம்ப மருத்துவப் பிரிவுகளை சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இயக்க சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் மஹிபால சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், வடமாகாண சுகாதார சேவையில் நிலவும் ஆளணியை நிரப்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் மஹிபால மற்றும் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன ஆகியோர் வடக்கு மாகாணத்துக்கு நேற்று(10.03.2024) விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது வடக்கிலுள்ள சில மருத்துவமனைகளை சென்று பார்வையிட்டதுடன் வடக்கிலுள்ள மருத்துவ அதிகாரிகளுடன் கலந்துரையாடலும் நடத்தப்பட்டுள்ளது.
பணி வெற்றிடங்கள்
குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப் பாளர் தெரிவித்துள்ளதாவது,
"வட மாகாணத்தில் உள்ள ஆரம்ப மருத்துவ சுகாதார அலகுகளை மேம்படுத்தும் முகமாக நான்கு மருத்துவமனைகளை திறப்பதற்கான அனுமதியை வழங்கமுடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
மேலும், ஆரம்ப சுகாதார பிரிவுகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நோயாளர் கிளினிக்கை மேற்கொள்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான ஆளணியைப் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்களுக்கு வழங்குவதன் மூலம் சேவையை வினைத்திறனாக எதிர்காலத்தில் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற பணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆளணிக்குரிய அனுமதியை வழங்குவதாகவும் அமைச்சின் செயலாளர் இதன்போது கூறினார்.

மேலும், சில மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான ஆளணி அதிகமாகதேவைப்படுகின்றது. அவற்றை வழங்குவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.
வட மாகாணத்தில் 140 குடும்பநல சேவை உத்தியோகத்தர்களே உள்ளனர். எதிர்கா லத்தில் குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படும்போது வடக்கு மாகாணத்துக்கு அதிகளவானோரை நியமிக்க இணக்கம் காணப்பட்டது.

அத்துடன் தாதிய உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் இணங்கினார்" என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri