வடக்கு ஆளுநருக்கும் இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தினருக்குமிடையே சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (29) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது தொழில்நுட்ப சேவையாளர் சங்கத்தால் ஆளுநரிடம் மனு கையளிக்கப்பட்டது.
கோரிக்கை
அந்த மனுவில், தொழில்நுட்ப சேவை உத்தியோகத்தர்கள் பணியாற்றும் வடக்கு மாகாணத்தின் பல்வேறு திணைக்களங்களிலும் வேறுபட்ட விதங்களில் போக்குவரத்துப்படி வழங்கப்பட்டு வருவதாகவும் அதனை மீளமைக்குமாறும், இடமாற்றங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கான பொறியியலாளர்களை நியமிக்குமாறும், தரக்கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக எந்திரவியல் பொருட்கள் ஆய்வு கூடங்களை அதிகரிக்குமாறும் கோரியுள்ளனர்.
ஊழலற்ற சிறந்த அபிவிருத்தியை அடைவதற்கு வேலை முன்னுரிமை உரியவாறு பெறப்பட்டதனை உறுதிப்படுத்த பல்வேறு தொகுதியினரை உள்ளடக்கி இறுக்கமாக கண்காணிக்குமாறும், தொழில்நுட்ப கணக்காய்வு தொகுதியை உருவாக்குமாறும், ஒரு வேலை நிறைவேற்றப்பட்டால் அது மீண்டும் மேற்கொள்வதற்கான கால அவகாசம், பராமரித்தல் மற்றும் இயக்குதல் வழிகாட்டிகளை வெளியிடுவதுடன் இறுக்கமாக அதனை நடைமுறைப்படுத்துமாறும் ஆளுநரிடம் கையளித்த மனுவில் கோரியுள்ளனர்.
வடக்கு மாகாண பிரதம செயலர், பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், பிரதிப் பிரதம செயலாளர் - பொறியியல் ஆகியோரையும் உள்ளடக்கி விரைவில் கலந்துரையாடல் நடத்தி இவை தொடர்பில் ஆராய்வதாக ஆளுநர் பதிலளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
