வடமாகாண கடற்றொழில் சங்கங்கள் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பை ஏற்று, வடமாகாண கடற்றொழில் சங்கங்கள் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டது.
இது தொடர்பில் வட மாகாண கடற்றொழில் சங்கங்களின் இணையத்தின் செயலாளர் செயலாளர் முகமட் ஆலம் கருத்து தெரிவிக்கையில், குறிப்பாக அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழகம் சென்றிருந்த நிலையில் இந்திய கடற்றொழிலாளர்கள் விடயங்கள் பேசும் பொருளாக காணப்பட்டது.
ஆனால் தமிழகம் செல்வதற்கு முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கை கடற்றொழிலாளர் பிரதிநிதிகளை சந்தித்து எதுவிதமான கலந்துரையாடலும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக தமிழகம் சென்று அங்கு இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசி இருக்கின்றார்.
கடற்றொழில் அமைப்புகள்
இது தொடர்பில் நாங்கள் ஊடகங்கள் வாயிலாக விமர்சனங்களை வெளியிட்டோம்.அத்துடன் இந்தியா சென்று வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அங்கு என்ன பேசினார்கள் என்ற விடயம் கூடி இதுவரை பேசப்படாத நிலையில் இன்றைய தினம் எங்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அண்மையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் குழு தமிழகம் சென்று தமிழக முதலமைச்சரை சந்தித்து பேசி இருந்த என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது என்பது தொடர்பில் அவர் சொல்லவில்லை அப்பொழுது.
குறிப்பாக வட மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு கடற்றொழில் அமைப்புகள் இன்றைய தினம் வருகை தந்து தமது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
மானியங்கள்
எதிர்வரும் ஐந்தாம் திகதி நாடாளுமன்றத்தில், கவனயீர்ப்பு மாதிரி ஒன்றை பாராளுமன்றத்தில் செய்து அரசாங்கத்திடமிருந்து அது தொடர்பில் மீனவர்களுக்கு ஏதாவது மானியங்கள் கிடைக்குமா என்பது தொடர்பில் தான் கேட்டுக் கொள்வதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறி இருந்தார்.
அதேபோல் தான் பேசிய விடயங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கருத்து தெரிவித்ததாக முகமட் ஆலம் தெரிவித்தார்.