வட மாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்
வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்றுள்ளது.
இந்த கூட்டமானது இன்று(27.06.2026) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் உப தலைவர் அன்டனி ஆல்பர்ட் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள்
இதன் போது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் புதிய அரசாங்கம் கடற்றொழிலாளர்களினுடைய பிரச்சனைகளுக்கான எந்தவித தீர்வுகளையும் முன் வைக்காத நிலையில் தேசிய ரீதியில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பொதுக் கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வட மாகாணத்திற்கு உட்பட்ட கடற்றொழிலாளர்களினுடைய பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் கேமன் குமார பிரதம விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
மேலும், கூட்டத்தின் இறுதியில் கடற்றொழில் நீரியல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் கலந்துகொண்டு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.


நீதியமைச்சர் பதவியை வைத்து விஜேதாச ராஜபக்ச செய்த அநியாயங்கள் - பெண் ஒருவர் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்