மகிழ்ச்சியாக தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்ட வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள்
கடந்த இரண்டு மாதங்களாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக தொழில் மேற்கொள்ளக் கூடியதாக இருந்ததாக யாழ். மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவில் மீன்பிடி தடைக்காலம் முடிவடையுள்ள நிலையில், இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக்கு அத்துமீறி வராமல் இருக்க இரு நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிய நடவடிக்கை
இந்தியப் பிரதமராக மோடி தெரிவானமைக்கு கடற்றொழிலாளர்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். இந்தியப் பிரதமர் இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவை மடிப் படகுகளை தடைசெய்ய வேண்டும்.
எதிர்வரும் 15ஆம் திகதி கடற்றொழில் தடைக்காலம் முடிந்து இந்திய இழுவை மடிப் படகுகள் எமது எல்லைக்குள் வராது தடுக்க இலங்கை அரசும் கடற்படையும் நடவடிக்கை எடுத்தல் அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |