வடக்கு ஆசிரிய ஆளணி விவகாரம் குறித்து ஆளுநர் முன்வைத்துள்ள கோரிக்கை
ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியதே. அவர்கள் தங்கள் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றி ஒத்துழைக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் நேற்று (17.09.2025) நடைபெற்றது.
அரசாங்க நிதியுதவி
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், "புதிதாக நியமிக்கப்பட்ட இளம் அதிபர்களின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கனவாக உள்ளன. அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அடிக்கடி பாடசாலைகளுக்கு களப் பயணம் மேற்கொள்ள வேண்டும். பாடசாலைகளின் தேவைப்பாடுகளை கண்டறிய வேண்டும்.
சில பாடசாலைகள் நேரடியாக வெளியாட்களிடம் உதவிகளைக் கேட்கின்றனர். அரசாங்கத்தின் நிதியுதவியில் செய்யக் கூடிய விடயங்களைக்கூட வெளியாட்டகளிடம் கேட்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடு எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றனது. எந்தவொரு பாடசாலைகளும் உரிய நிர்வாக நடைமுறைக்கு மாறாக இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது. அதேநேரம் எந்த நிதியாக இருந்தாலும் அது தொடர்பான வெளிப்படைத்தன்மையும் அவசியம்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

















16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
