ஆசிரியர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்! வடமேல் மாகாண ஆளுநர் உறுதி
வடமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விரைவில் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் (Nazir Ahmed) உறுதியளித்துள்ளார்.
மல்வத்தை அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுடன் இன்று (13.03.2014) மேற்கொண்ட விசேட சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"வடமேல் மாகாணத்தில் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை விரைவாக பூர்த்தி செய்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கவுள்ளோம்.
விசேட சந்திப்பு
மேலும், பாடசாலைகள் மற்றும் குடும்பங்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை, சுற்றுலா - வர்த்தகத் துறையானது தற்போது இரண்டு வீதமாக உள்ளது. அதனை மேம்படுத்தும் வகையில் பல விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அது மாத்திரமன்றி, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் ஊடாக வடமேல் மாகாணத்தின் சுற்றுலா வர்த்தகம் அபிவிருத்தியடைந்து பொருளாதாரம் மேலும் விருத்தியடைந்து வருகின்றது" என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநர், இன நல்லிணக்கத்திற்கு சேவையாற்றக் கூடியவர் என மல்வத்தை அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
மேலும், ஆளுநர், மல்வத்து கட்சி அனுநாயக்க விக்ரமாராச்சி (Anunayaka Vikramarachi) ஆயுர்வேத பல்கலைக்கழக வேந்தரையும் நியங்கொட விஜிதசிறி அனுநாயக்க தேரரையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |