வடக்கில் புலிப் பூச்சாண்டி காட்டாதீர்கள்! சிவாஜிலிங்கம் ஆதங்கம்
வடக்கில் புலிப் பூச்சாண்டியை காட்டி, தமிழ் இளைஞர், யுவதிகளைக் கைதுசெய்வதை உடன் நிறுத்த வேண்டுமென வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே, மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாக முன்னரே, மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன எனவும், இதனை சமாளிப்பதற்காக, வடபகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, யாழ்ப்பாண மாநகர மேயர் மணிவண்ணன் உட்பட ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் வகைதொகையின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுகின்றனர்.
புலிகள் மீள உருவாவது கட்டுப்படுத்துகின்றது, தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனர் என சிங்கள மக்களுக்கு காண்பிப்பதற்காகவே, இந்த செயற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றது.
சிங்கள மக்கள் எதிர்க்கிறார்கள் என்றால், அவர்களுடைய உரிமை, அந்த எதிர்ப்புக்காக அவர்கள் கூறிய காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய முன்வர வேண்டும்.
அதை விடுத்து, வடக்கில் புலிப் பூச்சாண்டியைக் காட்டி, தமிழ் இளைஞர், யுவதிகளைக் கைது செய்வதை நிறுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
