ஜப்பான் கடலில் பாய்ந்த ஏவுகணை!இரு நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
ஜப்பான் கடல் பரப்பில் வட கொரியா மீண்டும் ஏவுகணையை செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரியா மீண்டும் கடலோர நகரமான சின்போவில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் உதவியுடன் ஏவுகணையை ஜப்பான் கடற்பரப்பில் ஏவியுள்ளது என்று தென் கொரிய கூட்டுப் பணியாளர்கள் (JCS)தெரிவித்துள்ளனர்.
இராணுவ பயிற்சிகளுக்கு எதிர்ப்பு
தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் இராணுவ பயிற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏவுகணை ஏவப்பட்டு இருப்பதாக JCS தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த ஏவுகணை இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் “கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும் அதே வேளையில், நமது ராணுவம் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்பில் முழு தயார் நிலையையும் பேணி வருகிறது” என்றும் தென் கொரிய கூட்டுப் பணியாளர்கள் (JCS) தெரிவித்துள்ளது.
ஏவுகணை பரிசோதனை
வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளின் விளைவாக, அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மிகப்பெரிய இராணுவ போர் பயிற்சியை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இதையடுத்து கடந்த வியாழக்கிழமை வட கொரியா தங்களது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை விண்ணில் ஏவி சோதித்து இருந்தது.
இது நிலையற்ற தாக்கத்தை கொண்டுள்ளது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
