சர்வதேசத்திற்கு வடகொரியா விடுத்த எச்சரிக்கை! - அதிசக்தி வாய்ந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
வடகொரியா, கடந்த ஐந்து ஆண்டுகளின் பின்னர் செலுத்திய மிகச் சக்திவாய்ந்த ஏவுகணையில் பொருத்தப்பட்ட கெமரா மூலம் எடுக்கப்பட்ட விண்வெளியின் நிழற்படத்தை அந்த நாட்டு அரச ஊடகம் வெளியிட்டுள்ளது.
கொரிய தீபகற்பம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை காட்டும் வகையில் குறித்த நிழற்படங்கள் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வாசோங் 12 என்ற இடைநிலை வீச்சுக் கொண்ட பெலஸ்ரின் ரக ஏவுகணையை பரிசோதனை செய்ததை வடகொரியா உறுதி செய்துள்ளது.
முழுமையான சக்தியையும் பயன்படுத்தும் பட்சத்தில் குறித்த ஏவுகணையானது அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்ட குவாம் போன்ற பகுதிகளையும் தாக்கும் வல்லமை கொண்டதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடகொரியாவின் இந்த புதிய சோதனையானது, சர்வதேச சமூகத்திற்கு மற்றுமொரு எச்சரிக்கை ஒலியாக அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏவுகணையின் துல்லியத்தை சரிபார்க்கும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வடகொரிய அரச ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அயல்நாடுகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் வடகொரியா குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏவுகணையின் தலைப் பகுதியில் பொருத்தப்பட்ட கமரா மூலம் எடுக்கப்பட்ட நிழற்படங்களையும் வடகொரியா இன்று வெளியிட்டுள்ளது.
இந்த ஏவுகணை செலுத்தப்பட்ட போது ஒரு நிழற்படமும், வானில் நடுவில் பயணித்த போது ஒரு நிழற்படமும் அதிஉச்சத்தை அடைந்த போது எடுக்கப்பட்ட மற்றுமோரு நிழற்படத்தையும் வடகொரியா வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த ஏவுகணைப் பரிசோதனைய நேரில் பார்வையிடுவதற்கு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை கண்டறிதலை கட்டமைப்புக்களை தவிர்த்து பயணிக்க கூடியதாக வடிவமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட வகை தொழிற்நுட்பங்களை உள்ளடங்கிய ஏவுகணைகளை இதுவரை மூன்று தடவைகள் மாத்திரமே வடகொரியா பரீட்சித்துள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 10 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam