கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உலகிற்கு அறிமுகப்படுத்திய வட கொரியா!
வடகொரியத் ஜனாதிபதி கிம் ஜாங் உன், தனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆளும் தொழிலாளர் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று(10) இரவு பியோங்யாங்கில் நடைபெற்ற பெரிய அளவிலான இராணுவ அணிவகுப்பின் போது இந்த ஆயுத காட்சி நடந்துள்ளது.
இராணுவ அணிவகுப்பு
இந்த நிகழ்வில் சீனா பிரதமர் லி கெகியாங், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் மற்றும் வியட்நாமியத் தலைவர் டோ லாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
North Korea marked the 80th anniversary of its ruling party with a massive military parade in Pyongyang
— NEXTA (@nexta_tv) October 11, 2025
Kim Jong Un personally oversaw the event and unveiled the new Hwasong-20 intercontinental ballistic missile — the most powerful weapon in North Korea’s arsenal.
In his… pic.twitter.com/YYmUAAOiQC
இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியா 'ஹ்வாசொங்-20' எனப்படும் அதன் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை காட்சிப்படுத்தியது.
இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணையுடன், நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
