அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை - இப்படிக்கு உலகம் தொகுப்பு
வடகொரியா அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஒரு பெரிய தவறை ஜோ பைடன் செய்து இருப்பதாக கூறி வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் பேச்சை நிகழ்த்தினார். அப்போது அவர் வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் அமெரிக்காவின் தேச பாதுகாப்புக்கும், உலக பாதுகாப்புக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று விமர்சித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுக்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இப்படிக்கு உலகம் தொகுப்பு,