அணுஆயுத சோதனையால் பதற்றம்! அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை
ஐ.நா.சபை விதித்துள்ள தடையையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியினை தீவிரப்படுத்தியுள்ளன.
வடகொரியா தற்போது அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருகிறது.
அணு ஆயுத சோதனை
இந்நிலையில் குறித்த பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் அவ்வப்போது பதற்றத்தை வடகொரியா ஏற்படுத்துத்திவருகிறது.
அமெரிக்காவுடனான கூட்டுப்போர் பயிற்சி காரணமாகவே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா இந்த நகர்வுகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சோதனையில், சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவு பாய்ந்து இலக்குகளை ஏவுகணைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.
கடுமையான பதிலடி
இதனை தொடர்ந்து அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
