உதைபந்தாட்ட சங்கத்தேர்தலில் வடக்கிலிருந்து மூவர் போட்டி
இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் தேர்தலில் (2021) வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தி மூவர் இம்முறை களம் காண்கின்றனர்.
இலங்கை உதைபந்தாட்ட தாய் சங்கத்தின் புதிய நிர்வாக சபைத்தேர்தல் எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ளது.
குறித்த தேர்தலில் முக்கிய பதவிகளிற்காக வடக்கிலிருந்து மூன்று பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், உபபொருளாளர் பதவிக்கு வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கதலைவர் அ. நாகராஜன், உபசெயலாளராக வடமராட்சி உதைபந்தாட்ட சங்க தலைவர் தி.வரதராசன், உபதலைவர் பதவிக்கு யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட சங்க தலைவர் இம்மானுவல் ஆர்னல்ட் ஆகியோர் களம் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கால்பந்தாட்ட சங்க தேர்தல் வரலாற்றில் வவுனியாவிலிருந்து முக்கிய
பதவிக்கு ஒருவர் களம் காண்கின்றமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
    
    
    
    
    
    
    
    
    
    மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan