இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு: வடக்கு ஆளுநர்
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ ஏதிலிகள் இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ ஏதிலிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ ஏதிலிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (22.03.2025) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
எல்லோருடைய விருப்பமும் இதுவே
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தங்கியுள்ள ஈழ ஏதிலிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர வேண்டும் என போர் முடிந்ததிலிருந்து சொல்லப்பட்டு வருகின்றது. அவர்கள் மீண்டும் இங்குவர வேண்டும் என்பதே இங்குள்ள எல்லோரது விருப்பம்.
அத்துடன் கடந்த காலங்களில் இவ்வாறு இந்தியாவிலிருந்து வந்த ஒவ்வொருவர் தொடர்பான விவரங்களையும் பெற்று அவர்களுக்கு எத்தகைய தேவைப்பாடுகள் இன்னமும் இருக்கின்றன என்பதை அறிந்து அதனை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.















உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 18 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
