வட- கிழக்கில் சட்டம் மற்றும் ஒழுங்குகள் மீறப்படுகின்றது: சுரேஸ் பிரேமச்சந்திரன்
வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறுபட்ட சந்தர்பங்களில் சட்டம் மற்றும் ஒழுங்குகள் மீறப்படு சிங்கள தரப்பினர்கள் தாங்கள் விரும்பியவாறு செயற்படுகின்றனர் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக கொழும்பில் பெருமளவிலான பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றது.
புத்த சிலைகளை வைக்கும் முயற்சி
இந்நிலையில் அரசாங்கத்துக்கு எதிராம சத்தித்திட்டமொன்று கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்நிலையில் திருகோணமலையில் அரச உத்தரவையும் மீறி பௌத்த பிக்குகள் புத்த சிலைகளை வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் கொழும்பை பொருத்தவரையில் அரசாங்கத்துக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகின்றது என பரவியுள்ள கற்பனை தகவலில் பலத்த பாதுகாக்கு வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,



