கிழக்கை புறம்தள்ளி நாம் எதையும் சாதிக்க முடியாது! வடக்கு கிழக்கு - தமிழ் மக்களின் பூர்வீக தாயகம்
இலங்கை தீவின் சரித்திரத்தை ஆராயுமிடத்து, தமிழ் மக்களின் பூர்வீக தாயாகமாக விளங்குவது - வடக்கு கிழக்கு என்பதை பௌத்த சிங்கள கல்விமான்கள் புத்திஜீவிகள் உட்பட யாவரும் ஏற்று கொண்ட விடயம். இது இன்று நேற்றைய சமாச்சாரம் அல்ல.
இலங்கைதீவு போத்துகேயர், ஒல்லாந்தர், பிரித்தானியருடைய காலோனித்துவ காலத்திற்கு பல நூற்றாண்டுக்கு முன்னைய விடயம். என்னவானலும், இலங்கைதீவு வாழ் தமிழ் மக்களின் சரித்திரம் என்பது சோகம், இரத்தகாறைகள, தோல்விக்கு மேல் தோல்வி நிறைந்ததாகவே காணப்பட்டது, காணப்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதே பணியில் நாம் தொடர்ந்து பயணிப்போமானால், இன்னும் சில காலத்திற்குள், இலங்கைதீவில் தமிழீனத்தின் இருப்பு கேள்விகுறியாகும். அதாவது, எமது இனம் இலங்கைதீவில் அழிந்து போகும் என்பதே யாதார்த்தம்.
பௌத்த சிங்களவர்கள்
பெரும்பாலான பௌத்த சிங்களவர்கள், தமிழீனத்தை இலங்கை தீவிலிருந்து அழித்தே ஆகவேண்டுமென காண்கணம் கட்டியுள்ள இவ்வேளையில், தமிழினத்தின் வழிகாட்டிகள் என்னும் பொழுது – தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் தலைவர்கள், நவீன தமிழ் தலைவர்கள், தமிழ் செயற்பாட்டாளர்கள் போன்றோர் ஒரு புறம் தமிழ் புத்திஜீவிகள், தமிழ் கல்விமான்கள், தமிழ் தொழில் அதிபர்கள் போன்றோர் மறுபுறமும் புலம் புலன் பெயர்ந்த தமிழர்கள், சலுகைகளை நோக்கிய மசவசான செயற்பாட்டாளர்கள் பலர் இன்னொரு புறமும் என்ன செய்கிறார்கள் என்ற கேள்விக்கு நாம் விடை காண நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.
இவ்விடயத்தை ஆரம்பிப்பதற்கு முன் சில முக்கிய விடயங்களை கூறியே ஆக வேண்டும்.
இலங்கைதீவு வாழ் தமிழர்கள் என்னும் பொழுது, இதற்குள் இஸ்லாமிய சகோதரர்களும் அடங்குவார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
காரணம், வடக்கு கிழக்கில் ஆயத போராட்டம் ஆரம்பமாகியதை தொடர்ந்து, ஆளுமை நரி தந்திரம் நிறைந்த பௌத்த சிங்கள தலைவர்கள், ‘பிரித்து ஆளும் அடிப்படையில்’ இஸ்லாமிய சகோதரர்களை தமிழர்கள் என்ற அடையாளத்திலிருந்து பிரித்து, தமது சுயதேவை கருதி, மாறுபட்ட அடையாளமாக “இஸ்லாமியர்” என்று தனித்து பயணிக்க ஊக்குவித்தார்கள் என்பதும் யாதார்த்தம். ஆயுத போராட்டத்தை அழிப்பதற்கு, இஸ்லாமிய சகோரர்களின் சரீர உதவிகளை பௌத்த சிங்களவர்கள் பாரியளவில் பாவித்தனர் என்பதும் மறைக்க முடியாத உண்மை.
இஸ்லாமிய சகோதரர்கள்
அது மட்டுமல்லாது, மீக நீண்ட காலமாக தமிழ் அரசியல் கட்சிகளுடன் பயணித்த இஸ்லாமிய சகோதரர்களை, இஸ்லாமிய அடையாளம் கொண்ட அரசியல் கட்சிகளை உதயமாக்கவும் ஊக்குவித்தனர்.
சிங்கள பௌத்த தலைவர்களினால் இவ் நரி தந்திரத்தினால்- தமிழ், இஸ்லாமிய மக்களே மிக மோசமாக இறுதியில் பதிக்கப்பட்டனர் என்பதும் இன்னுமொரு யாதார்த்தம்.
இவை ஒரு புறமிருக்க, எமது மலையாக சகோதரர்களான, இலங்கைதீவின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கும் தோட்ட தொழிளராது நிலையும், ஆளுமை நரி தந்திரம் நிறைந்த சிங்கள பௌத்த தலைவர்களின் சூழ்ச்சியினால், சர்வதேச வரையறை, சர்வதேச சட்டங்கள் ஒழுங்கு முறைகள் யாவற்றையும் புறம்தள்ளிவிட்டு, நூற்றண்டுகளிற்கு மேல் பரம்பரை பரம்பரையாக இலங்கைதீவில் வாழ்ந்த இவர்களை, அங்கிருந்து, இடம் வலம் அறவே தெரியாத பூமியான இந்தியாவிற்கு ஆயிரக்கணக்காக நாடு கடத்தப்பட்டார்கள்.
இதற்கு “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற வாக்கியங்களை தேர்தல் மேடைகளில் புசத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் திரு ஜீ ஜீ பொன்னம்பலமும் “ஆமா போட்டார்” என்பது வரலாற்று வடு.
அவ் வேளையில், வேறு நாடுகளான – தென் ஆபிரிக்கா, மொறிசியஸ், றியூனியன், மலேசியா போன்ற பல நாடுகளிற்கு பிரித்தானியரினால், தமிழ்நாட்டிலிருந்து, கூலி வேலைக்கு கொண்டு செல்லப்பட்ட தொழிழர்களுடன் ஒப்பிடும் பொழுது, சிங்கள பௌத்தர்களின் இனத்துவேசம் மட்டுமல்ல, இலங்கைதீவு ஒர் பௌத்த சிங்கள நாடாக மாற்றப்படுவதற்கான அத்திவாரம், என்றோ போடப்பட்டு விட்டது என்பது இங்கு வெளிச்சமாகும்.
இங்கு வேடிக்கை என்னவெனில், ஆயத போரட்ட வேளையில், தமது அடாத்தான சர்வதேச பிரசாரத்தை மேற்கொண்ட சிங்கள பௌத்த அரசுகள், பிரித்தானியர்களினால் தேயிலை இறப்பார் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள், தனி நாடு கோரி ஆயுத போராட்டம் மேற்கொண்டுள்ளதாக உலகம் பூராகவும் பிரச்சாரம் செய்தனர்.
ஆமா சாமி
இவ் அரசுகளிற்கு, தாம் தமிழர்கள் என்பதை மறந்து அன்றும் இன்றும் கண்மூடித்தனமாக தமது சுயநலம் சுயலாபம் தேடி துணை போகும் தமிழர்கள் எனப்படுவோரும், “ஆமா சாமி” யாக இருந்தார்கள் இருக்கிறார்கள்.
இவர்களது கொள்கை என்பது “எனக்கு மூக்கு போனாலும் பறவாயில்லை, எதிரிக்கு சகுனம் பிழைத்தால் போதும்” என்பதே. மிக ஆழமாக ஆராய்ந்தால்,இவர்களது எதிரி என்பது, தமிழ் மக்கள் தமிழ் இனம் என்பது தெளிவாகிறது.
அடுத்து அன்று போராட்ட காலங்களில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களிடையே – சாதி சமயம், சீதானக் கொடுமைகள் அறவே இல்லாத வேளையில், இன்று இவை பற்றி ஆபாண்டமான பிரசாரம் செய்து சிங்கள பௌத்த அரசிற்கு துணை போபவர்கள், அன்று நடந்த தமிழரது போராட்டத்தில் பங்கு கொண்டவர்களாக காணப்படவில்லை! ஆகையால் சிங்கள பௌத்தர்களின் பிரித்து ஆளும் வேலைக்கு, இங்கு பணம் துள்ளி விளையாடுவதை நாம் காணக் கூடியாதாகவுள்ளது.
மிக ஏளனமான விடயம் என்னவெனில், ஐ.நா.மனித உரிமை சபையில் சர்வதே பிரதிநிதிகள் முன்னிலையில் எம்முடன் ஒரு தடைவ அல்ல பல தடைவ விவாதம் செய்ய முடியாது ஓட்டம் பிடித்த சரத்த வீரசேகர, இன்று தீவிர சிங்கள பௌத்தவாதியாக பாரளுமன்றத்தில் திகழ முயல்வது மிக நகைப்பிற்குரிய விடயம். இவரின் பின்னணியிலேயே பல விடயங்களை ரணில் விக்ரமசிங்க சாதிக்கிறார் என்பதே உண்மை.
ராஜபக்சாக்களின் ஆதரவு
இவரின் சகோதரரான ஆனந்தா ஜீ வீரசேகரா, யாழ். கோட்டையில் இராணு சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில், யாழ் தளபதி கிட்டுவிடம், தாங்கள் நிலை கொண்டிருக்கும் யாழ் கோட்டையை தாக்க வேண்டமென வேண்டுகோள் விட்டிருந்தது இங்கு குறிப்பிடதக்கது.
அவர் இறுதியாக ஓர் பௌத்த துறவியாக “வண வுடங்கலா ஆனந்தா” என்ற பெயருடன் வாழ்ந்த வேளையில், 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்தார். சரத்த வீரசேகரவை கவனத்தில் கொள்ளாது அலட்சியம் பண்ணிணால், இவர் அடங்கிவிடுவார். இவரது செயற்பாடுகள் யாவற்றுக்கும் ராஜபக்சாக்களின் ஆதரவு நிறைய உண்டு.
இந்தியாவின் மணிப்பூர்
இங்கு சிலருக்கு இந்தியாவின் மணிப்பூர் பற்றி சில விடயங்களை கூறியே ஆக வேண்டும். இந்தியாவில் வேறு பல மாணிலங்களிலும் பலவிதப்பட்ட அரசியல் சர்ச்சைகள் தினமும் கணப்படுகிறது.
சரத் வீரசேகரவின் குழுவினர்
இவர்களில் பலர், ஈழத்தமிழர்களுடன் இணைந்து தோழமையாக பயணிக்க மறுத்து வந்தது மட்டுமல்லாது, ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்ட பொழுது குரல் கொடுக்காதவர்கள். அடுத்து மணிப்பூரது சர்வதேச பிரச்சாரம் என்பது, பாகிஸ்தானின் பின்ணனியில் நடைபெறுகிறது.
இவர்களது சர்வதேச பிரசாரத்தை பின்னணியில் நின்று நகர்த்துபவர்கள், சரத் வீரசேகராவும் அவரது குழுவினரும் தமிழர்களது இன அழிப்பிற்கு எதிராக சர்வதேச பிரச்சாரம் செய்ய உதவுபவர்கள்.
இவற்றை உணர்ந்து பயணிக்க வேண்டும். யாவற்றையும் மிக சுருக்கமாக கூறுவதனால், “மூஞ்சுறு தான் போக காணவில்லையாம், ஒரு தும்புதடியையும் தூக்கி கொண்டு புறப்பட்ட” கதை தான், தமிழர்கள் மணிப்பூர் பற்றி கதைப்பது.
இனி விடயத்திற்கு வருகிறேன். முதற் கட்டமாக – தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் அரசியல்வாதிகள், நவீன தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் செயற்பாட்டாளர்களின் தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான பங்கை நாம் ஆராயுமிடத்தில், அன்றிலிருந்து இன்றுவரை, தமிழினம் தமிழ் மக்கள் என்ற அடிப்படையில் இவர்களில் (10) பத்து வீதமானர்கள் கூட உண்மையாக மனரீதியாக பங்களிப்பதில்லை என்பது தெளிவாகிறது.
இவர்கள் அன்றிலிருந்து இன்று வரை, தமது தேர்தல் விஞ்ஞாபனம் முதல் தேர்தல் பிரசாரம் வரை கூறுவது யாவும், தமது சுயநலத்திற்காக தாம் பாரளுமன்றம் செல்ல வேண்டுமென்பதையே நோக்கமாக கொண்டது.
தமிழர் மனிதர் உரிமைகள் மையம்
இவர்களிடையே ஓர் மாபெரும் குறைபாடு மிக நீண்டகாலமாக காணப்படுகிறது. அதை இவர்கள் யாரும் நிவர்த்தி செய்பவர்களாக காணப்படவில்லை. இவற்றை வெளிப்படையாக கூறுவதனால், இங்கு என்னால் பல வெட்கம்கெட்ட ஊதாரணங்களை எழுத முடியும்.
தமிழரசு கட்சியின் தலைமை பதவி மிக அண்மையில் அண்ணன் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது நினைவு தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் இவரின் குறைபாடுகளின் ஒன்று - அன்று தமிழரசு கட்சியின் தலைமை பதவி, கிழக்கு மாகணத்தை சார்ந்த திரு இராஜதுரை அவர்களிற்கு கிடைக்க வேண்டியதை, அவரிற்கு கொடுக்காது, அண்ணன் அமிர்தலிங்கம் அப் பதவியை ஆபகரித்தார் கொண்டார்.
இதனால் அவ்வேளையில் ஏற்பட்ட அரசியல் சிக்கல்கள், பிராந்திய வேறு பாட்டிற்கான அத்திவாரத்திற்கு உரம் ஊட்டியது என்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
ஆயுதப்போராட்ட காலத்தில், அதாவது 2005ம் ஆண்டு தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினால் - TCHR பிரசில்ஸ், பெல்யியத்தில் சில கூட்டங்கள் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர்களுடன் ஒழுங்கு செய்யப்பட்டது.
அவ்வேளையில் இக் கூட்டத்திற்கு – பாரளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனதிராஜா, அடைகாலநாதன், சுரேஸ் பிரேமசந்திரன், கஜன் பொன்னம்பலம் ஆகியோருடன் ஓர் பெண் பாராளுமன்ற உறுப்பினரும் வருகை தரவேண்டும் என்பதற்காக திருமதி பத்மினி சிதமப்பரநாதன் ஆகியோர் வருவார்களென எமக்கு அறிவிக்கப்பட்டது.
அவ்வேளையில், இவற்றை நாட்டிலிருந்து ஒழுங்கு செய்தவர்களிடம், எதற்காக கிழக்கு மாகாணத்தை சார்ந்த யாரும் இக்குழுவின் சேர்க்கப்படவில்லையென, என்னால் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, அதற்கு “இவர்கள் யாவரும் கட்சி தலைவர்களென பதில் தந்தார்கள்”. என்னை பொறுத்தவரையில் அது சரியான பதிலாக இருந்தாலும், “முறையான பதில்” இல்லை.
இவ் பாரளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் பிறசில்சிற்கு வந்து கூட்டங்களை முடித்து நாடு திரும்பியதும், கிழக்கு மாகாணத்தை சார்ந்த ஒரு பாரளுமன்ற உறுப்பினர், என்னை எனது பாரிஸ் காரியாலத்தில் சந்தித்து, “எதற்காக கிழக்கு மாகணத்தை சார்ந்த ஒருவரையும் நாம் இவ் பட்டியலில் இணைக்கவில்லை” என்ற கேள்வியை என்னிடம் எழுப்பினார். நடந்தவற்றை கூறியாதும், அதற்கு அவர் கூறிய பதில் என்னவெனில், “அப்படியானால் நாம் கிழக்கிலும் ஒரு அரசியல் கட்சியை உருவாக்குவோம்” என்றார்.
அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு
இன்று இவை யாவும் - சரியோ பிழையோ, செல்வாக்கு பெற்றார்களோ இல்லையோ, புத்திஜீவிகள் கல்விமான்கள் இவற்றில் இருக்கிறர்களோ இல்லையோ, 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் சில தமிழ் அரசியல் கட்சிகள் உருவாகியுள்ளன.
இவற்றை நான் இங்கு கூறுவதற்கு முக்கிய காரணம் என்னவெனில், சில வாரங்களிற்கு முன் அமெரிக்க தூதுவரை சந்தித்த அரசியல் பிரமுகர்ளிடையும் இந்த குறைபாடு காணப்பட்டது. இவற்றை நிவர்த்தி செய்ய தவறும் பட்சத்தில், வடக்கு கிழக்கு என்ற பிராந்திய குறைபாடு உச்சம் பெறுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது.
ஊதாரணத்திற்கு கஜன் பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நியமனம் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை, கிழக்கு மாகாணத்தை சார்ந்த ஒருவருக்கு இன்று தன்னும் கொடுக்காது காலம் கடந்துவது, மீண்டும் இக் கட்சி செய்யும் வாரலாற்று தவறாகும். இன பற்று கொண்ட ஒரு தமிழ் அரசியல் கட்சியாக அது திகழுமானால், இக் கட்சி ஒருவரின் இளைபாறும் ஊதியத்திற்கு மேலாக, இன ஐக்கியத்திற்கே முக்கிய இடமளிக்ககும்.
இதேவேளை, தமிழ் அரசியல் கட்சிகள் - முக்கிய சந்திப்புகள், முக்கிய கூட்டங்கள், முக்கிய மாநாடுகளிற்கு கிழக்கை சார்ந்தவர்களை இணைக்க வேண்டும். இல்லையேல் கொழுந்துவிட்டு எரிவதற்கு காத்திருக்கும் பிராந்திய வேறுபாட்டிற்கு நீங்கள் எண்ணை ஊற்றுகிறீர்கள் என்பதே உண்மை.
இவர்கள் யாவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவெனில், முன்பு தமிழ் ஐக்கிய விடுதலை கூட்டணியினர் பதினெட்டு (18) பாரளுமன்ற ஆசனத்தை பெற்ற காலமாக இருந்தாலென்ன, பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு (16) பதினாறு பாரளுமன்ற ஆசனங்களை பெற்றலென்ன, இவர்கள் யாரும் - தமிழ் மக்களிற்கு அடி, உதை, அழிவை தவிர வேறு எந்த அரசியல் உரிமையையும்,சிங்கள பௌத்த பாரளுமன்றத்திலிருந்து பெற்று கொடுத்தது கிடையாது. புத்திஜீவிகள், கல்விமான்கள்……
ஆகையால் இன்று பல அரசியல் கட்சிகளாக இவர்களது சுயநலத்தின் காரணம் மட்டுமல்லாமல், சிங்கள பௌத்த அரசுகளிற்கு மறைமுகமாக துணை போகும் வகையில், பிரிந்து நின்று, தமிழ் மக்களிற்கு இவர்கள் ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதே யாதார்த்தம்.
அத்துடன் பௌத்த சிங்களத்துடன் கைகோர்த்து நிற்கும் தமிழ் கட்சியும், சிங்கள தேசிய கட்சிகளும், வடக்கு கிழக்கில் வெற்றி பெறுவதற்கு இவர்களே வழி வகுக்தார்கள், வழிவகுக்கிறார்கள். இதை புரியாதவர்களாக இவர்கள் இருப்பார்களேயானால், இவர்கள் அரசியலுக்கு அருகதை அற்றவர்கள்.
சிங்கள பௌத்த புத்திஜீவிகள்
அடுத்து தமிழ் புத்திஜீவிகள், கல்விமான்கள், தமிழ் தொழில் அதிபர்கள். இவர்கள் சிங்கள பௌத்த புத்திஜீவிகள் கல்விமான்கள் தொழில் அதிபர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறவே அறியாதவர்கள் போல் காணப்படுகிறார்கள். ஆயுதபோராட்டத்திற்கு எதிரான சர்வதேச பிரச்சாரத்திற்கு,சிங்கள புத்திஜீவிகள் கல்விமான்கள் தொழில் அதிபர்களின் பங்கு பாரீயது.
ஆனால் தமிழ் தரப்பில், இவ் மூவர்களில் பெரும்பான்யானோர், கை கட்டி வேடிக்ககை பார்த்தவர்களும், ஆயத போராட்டத்தை கொச்சைப்படுத்தியது மட்டுமல்லாது, சிங்கள பௌத்த அரசுகளின் பங்காளிகளாக இணைந்து நின்று,வெற்றியடைந்து வந்த தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கான போராட்த்தை குழி தொண்டி புதைப்பதற்கு துணை போனவர்கள். இன்று இவர்களது நிலைபாடு இன்னும் வெடிக்கையானது.
இவர்களில் பெரும்பான்மையானோர் சிங்கள பௌத்த அரசுகளிற்காக தமிழர்களது தாயாக பூமியை சிங்கள பௌத்த மயமாக்குவதற்கு, தமது சுயநலம் சுயதேவை சுய அந்தஸ்தை நோக்கிய புத்திஜீவிகளும் கல்விமான்களும் பயணிக்கிறார்கள். இதேவேளை,தொழில் அதிபர்கள் “வண்டியை மாட்டிற்கு முன் கட்டுகிறார்கள்”.
பகுத்தறிவுடன் பயணியுங்கள்
இவர்களிற்கு அரசியல் சிந்தாந்தங்கள் புரியாவிடிலும், பகுத்தறிவுடன் இவர்கள் பயணிக்க வேண்டும். இவர்கள் அரசியல் தீர்வு இல்லாது, வடக்கு கிழக்கை முன்னேற்றுவதோ, முன்னேற்ற உதவுவதோ, வடக்கு கிழக்கு வாழ் மக்களின், சரித்திர ரீதியான பூர்வீக புமியின் சமூக பொருளாதர நிலைபாட்டை,மிக மோசமான நிலைக்கு தள்ளுகிறார்கள் என்றே பார்க்கப்படும்.
தொழில் அதிபர்கள் என்னும் பொழுது, இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளில் மிக நீண்டகாலமாக தளம் கொண்டவர்கள்.
இவர்களில் ஒரு சிலர் தமிழர்களின் போராட்டம் வெற்றியடைந்து வந்த வேளையில், நாடு உருவாகும் அதே வேளை, உங்களிற்கு வெளிநாட்டில் ஒர் மூலதனம் வேண்டுமென ஆசை கதைகளை கூறி, பாரீய பணத்தை தமது வியாபாரத்திற்கு கொண்டு சென்றவர்கள்.
இன்று இதே நபர்கள், ஒளித்து விளையாடுகிறார்கள். இது வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கும் செய்யும் பாரீய தூரோகமாகும்.
இவர்கள் பணத்தின் மேல் தூங்குவதனால், இவர்களை நித்திரையால் எழுப்புவது மிகவும் கடினம். இவர்கள் நித்திரையால் எழும்பும் வேளையில், தமிழர்களது தாயாக பூமியான வடக்கு கிழக்கு பௌத்த சிங்கள பிரதேசமாக மாற்றப்பட்டு, இவர்களது பாரீய சொத்துகளும் பௌத்த சிங்களவரது கைகளிற்கு சென்றுவிடும் என்பதை இவர்கள் என்று புரிவார்கள்? அடுத்து புலம்பெயர்வாழ் தமிழர்கள்.
இங்கு புலம் பெயர்வாழ் தமிழர்கள் எனும் பொழுது, இவர்களிடையே “புலன்” பெயர்ந்தவர்களின் தொல்லை புலம் பெயர்ந்த மக்களின் செயற்பாடுகள், அணுகுமுறைகளை நாசமாக்குகிறது.
2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், உருவான சகல சங்கங்கள், அமைப்புகள் போன்றவற்றினுள், சிங்கள பௌத்த அரசின் பின்னணிகளை கொண்ட இவர்கள் - சங்கங்கள் அமைப்புகளில் தெரியாதவிதமாக புகுந்து, விளையாடுகிறார்கள்.
இவர்கள் எங்கு ஒற்றுமை, ஒன்றுபட்ட செயற்பாடு, இணக்கம் தெரிகிறதோ, அங்கு எல்லாம் குழப்பங்களை ஏற்படுத்தி நல்ல வேலை திட்டங்களையும் தமக்கு கிடைக்கும் ஊதியத்தை பொறுத்து நாசமாக்கி விடுவார்கள்.
பஞ்சாயத்திற்கான தீர்வு
சாத்வீக,ஐனநாயக போராட்டங்கள் மூலம் , சிங்கள பௌத்த அரசாங்கத்தின் பாரளுமன்றத்தில், சர்வதேசத்தின் அளுத்தங்கள் மூலம், வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு, கிடைக்ககூடிய ஆக கூறைந்த அரசியல் தீர்வை, ராஐதந்திரம் அரசியல் தெரியாது, எதிர்ப்பு தெரிவித்தவர்கள்- சிறிலங்கா அரசினால் ஏற்கனவே கூறப்பட்ட பஞ்சயத்திற்கான தீர்வை,அடுத்த ஐனதிபதி, பாரளுமன்ற தேர்தலை தொடார்ந்து, மூன்றில் இரண்டு மூலம் நிறைவேற்றப்படும் பொழுது, “அணில் ஏறவிட்ட நாய் போல் காட்சியழிப்பார்கள்”.
அப்பொழுது தமிழ் மக்கள் இவர்களை நோக்கி மண்ணை அள்ளி திட்டுவார்கள். இவர்களிற்கு மசவாசக கிடைக்கும் ஊதியம் சலுகைகளை பொறுத்து, - தமது எழுத்துக்கள், குழப்பங்கள், அநோமதய கடிதங்கள், மனுக்களை செய்கிறார்கள் என்பதும், இவர்களும் பௌத்த சிங்கள அரசின் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து நின்று, தமிழ் மக்களை அழிவின் பதையை நோக்கி நகர்த்துகின்றனர் என்பது பலருக்கு புரியாது.
இவர்களுடைய செயற்பாடுகள் யாவும், நாரதர் நரிகளை வென்றதாக காணப்படுகிறது. இவர்கள் உண்மை யாதார்த்தை ஏற்க மறுப்பது மட்டுமல்லாது, யாவற்றுக்கும் விதாண்டவாத எழுத்துக்களும் நடடிவக்கைகளும் கொண்டவர்கள்.
இதில் வெடிக்கையான விடயம் என்னவெனில் இவர்களில் பலர், போராட்ட காலத்தில் கும்பகர்ண படலாம் வாசித்தவர்களும், போராட்த்தை கிண்டல் செய்தவர்களும், இன்று முன்னிலையில் நின்று, தமக்கு சிங்கள பௌத்த அரசுகளிடமிருந்து கொடுக்கப்படும் வேண்டுகோள் ஆலோசனைக்கு ஏற்ப, அணு குண்டுகளை போட்டு தமிழ் மக்களின் ஐக்கியத்தை நாளுக்கு நாள் சீரழிக்கிறார்கள்.
இவர்கள் யாவரும் - தமிழ் கட்சிகள், தமிழ் அரசியல்வாதிகள்,நவீன அரசியல்வாதிகள்,செயற்பாட்டாளர்கள் புத்திஜீவிகள், கல்விமான்கள், தொழில் அதிபர்கள், புலம் பெயர்வாழ் செயற்பாட்டாளர்கள் தமது நிலைபாடுகளை யாதார்த்தம் உண்மை ஆகியவற்றை முன்னிலைபடுத்தி செயற்பாடத காரணிகளினால், எதிர்காலத்தில் பல விடயங்கள் சாத்வீகமாகலாம். ஒன்று வெளிநாடுகளில் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை மிக மோசமாக அதிகரிக்கலாம்.
அடுத்து இன்றைய நிலையை விட பல மடங்கு மோசமாக, தமிழர்களே தமிழர்களிற்கு எதிராக சர்வதேசம் பிரச்சாரம் உட்பட, காட்டி கொடுப்புகளையும் மேற்கொள்ளலாம்.
இதேவேளை, குளீர் காலம் வந்ததும், தனது நிலையை மறைத்து வாழ்ந்த வாழைமரம், மீண்டும் வெய்யில் காலம் வந்ததும், உயிர்த்து செழிப்பாக வளர்ந்து கனிதரும் நிலையும் ஏற்படலாம். சுருக்கமாக கூறுவதனால், பதின்மூன்று வருடங்கள் என்பது ஒரு குழந்தை பிறந்து செழிப்பாக வாழ வேண்டிய காலம்.
இதற்குள் வடக்கு கிழக்கு வாழ் மக்களின் இருப்பிற்கு நாசகார வேலைகள் செய்தவர்கள் செய்பவர்கள், “குடு குடுப்பை சாத்திரியின்” ஆருடத்திற்கு அமைய, ஒதுங்கி வாழ வேண்டிய காலம் உருவாகலாம்.
(முற்றும்)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |