பூரண முடக்கத்திற்கு யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28.07.2023) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் பூரண ஆதரவினை வழங்குகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று (27.07.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே
இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி
இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் இதுகால வரையிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் விவகாரங்கள் பூசி மெழுகப்பட்டு, காத்திரமான நடவடிக்கைகள் எதுவுமின்றி நீர்த்துப்போகச் செய்யப்பட்டமையே வரலாறு.
இதேபோன்று மேற்படி கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திலும் நடைபெறாது இருக்க வேண்டும் என்பதோடு, கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி உட்பட தமிழர் பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளும் உரிய வகையில் சர்வதேச கண்காணிப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகளை வெளிக்கொணர வேண்டியது அவசியமானது என்பதனை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இவ்விவகாரத்தின் நியாயத்தன்மையினை புரிந்துகொண்டு, இதனை தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்கோ, அரசியல் தேவைகளுக்கோ பயன்படுத்தாது உண்மையான தீர்வினை வலியுறுத்தி சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட்ட அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதோடு அனைவரினதும் முழு ஆதரவினையும் வேண்டி நிற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
