வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் குழப்பம்: விளக்கமளித்த சங்கம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் வவுனியாவில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் கைகலப்பு தொடர்பாக குறித்த சங்கம் விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கமானது எட்டு மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகத்தை ஸ்தாபித்து அவர்களை நிர்வாகித்து வரும் ஒரு தாய் அமைப்பாகும். வவுனியா மாவட்டத்தின் நிர்வாகமானது திருமதி சறோஜினி என்பவர் தலைமையில் இயங்கி வருகின்றது.
மீள ஒப்படைத்தல்
வவுனியா மாவட்டத்தின் செயலாளராகவும் எட்டு மாவட்ட நிர்வாகத்தின் பொருளாளராகவும் இருந்த திருமதி ஜெனிதா அவர்களை கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் நடந்த சில சம்பவங்களிற்காக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு 6 மாதங்களிற்கு பொறுப்புக்கள் அனைத்திலிருந்தும் விலகி சாதாரண உறுப்பினராக இருக்கும் படி எமது சங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டார்.
அவரிடம் உள்ள சகல ஆவணங்கள், வரவு செலவு கணக்கு, பணக்கையிருப்பு அனைத்தையும் மீள ஒப்படைக்குமாறும் கோரப்பட்டிருந்தார்.தொடர்ந்து பதிவுத்தபாலில் எழுத்து மூலமாகவும் அவர் மேற்படி தீர்மானத்தின்படி செய்யும் படி அறிவுறுத்தப்பட்டார்.
ஆனால் அவர் இன்று வரை சங்கத்தின் ஆவணங்களையோ, வரவு செலவு கணக்கு, பணக்கையிருப்பு என்பவற்றை நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. இவ்வாறாக ஒழுக்காற்று நடவடிக்கையை தொடர்ந்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் நிர்வாக ஒழுங்கிற்கு உட்படாமல் தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்.
இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தின் தலைவி திருமதி சறோஜினி அணுகிய, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் ( திருமதி ஜெனிதாவின் நடவடிக்கைகளால் அதிருப்திப்பட்டு விலகி இருந்தவர்கள்) வடக்கு கிழக்கு நிர்வாகத்தின் தலைவர் செயலாளர் ஆகியோரைச் சந்திக்க விரும்புவதாக கூறியிருந்தனர்” என கூறப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 21 மணி நேரம் முன்

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
