தாயக பகுதிகளில் சதொச விற்பனை நிலையங்களை விரிவுபடுத்த விசேட வேலைத்திட்டம்
வடகிழக்கு மாகாணத்தில் சதோச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக வாணிபத்துறை பதில் அமைச்சரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(28.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இன்று தனியார் வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாது விற்பனை செய்துவரும் நிலையில் குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்களை விற்பனைசெய்யவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது.
புதிய சதோச விற்பனை நிலையங்கள்
எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கிழக்கு மாகாணத்தில் 10சதோச விற்பனை நிலையங்களை திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.'' என தெரிவித்துள்ளார்.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் புதிய சதோச விற்பனை நிலையத்தினை நிறுவுவது குறித்தும் நஸ்டத்தில் இயங்கும் நிலையங்களை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.அத்துடன் வறிய மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் சதோசவினை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
