வடக்கு - கிழக்கினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் கூட்டமைப்பிடம்! சாணக்கியன் வெளியிட்ட தகவல்

Srilanka Parliment Tamil National Alliance Shanakiya Rasamanickam
By Independent Writer Oct 08, 2021 02:42 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

வடக்கு - கிழக்கிலுள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiya Rasamanickam) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டை நடத்தி செல்ல வருமானம் அதிகமாக இருக்க வேண்டும். செலவு குறைவாக இருக்க வேண்டும். சாதாரணமாக கூறுவது என்றால் நாட்டில் பணம் இருக்க வேண்டும். உலகில் ஷ்டீவ் ஜொப்ஸ். பில்கேடஸ், ஜெக் மார்க் போன்ற மில்லியனர்கள், பில்லியனர்கள் தமது திறமையால், உழைப்பால் முன்னேறி வந்தவர்கள் என்பதை நாம் அறிவோம்.


ஆனால், எமது நாட்டில் மில்லியனர்கள் அதிகளவில் உள்ளனர். திருட்டுகளின் ஊடாக மில்லியனர்கள் ஆனவர்கள் உள்ளனர். அவர்களின் திருட்டுகளுக்கு உதவி செய்த அரசியல்வாதிகள் உள்ளனர். திறமையால் முன்னேறியவர்களும் இருக்கின்றனர்.

எனினும், அரசியல்வாதிகள் உதவியுடன் பணம் சம்பாதித்தவர்களே அதிகளவானவர்கள் உள்ளனர். அண்மைய காலங்களை எடுத்துக்கொண்டால் ஒரு வருடத்துக்குள் பில்லியன் கணக்கில் இலாபம் பெற்ற தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவர்களுக்கு அவ்வாறு முடியும் என்றால், அரசுக்கு வருமானம் குறைவடைந்தமை குறித்து அரசாங்கம் தேடியறிய வேண்டும்.

அரசு வழங்கிய வரி சலுகைகள் காரணமாக பொதுமக்களை விட நிறுவனங்களே அதிகளவில் நன்மை பெற்றனர். இன்று சீமெந்து, பால்மா, கேஸ் உள்ளிட்டவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன.

சீனி மோசடி, வெள்ளைப்பூடு மோசடி என்று மோசடிகளை அடுக்கிக்கொண்டே செல்லாம். நான் விமர்சிக்கவில்லை. வரிச்சலுகை வழங்கப்படுவதால் சாதாரண மக்கள் மீதே தாக்கம் செலுத்துகின்றது. பாரிய நிறுவனங்கள் பாதிக்கப்படுவதில்லை.

எனவே தான், பொதுமக்களுக்கு நன்மை பெற்றுக்கொடுக்கும் வகையிலான வரிச்சலுகை முறையினரை அறிமுகப்படுத்துமாறு நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றோம். காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க 2019 ஏப்ரல் பட்ஜட்டில் முன்மொழியப்பட்டது.

இன்று வரை 153 குடும்பங்களுக்கு மாத்திரம் அந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. அந்த கொடுப்பனவும் 2019 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு பிறகு வழங்கப்படவில்லை. காணாமல்போன நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

எனினும், அதனை செய்யும் வரை அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். அதற்காக மரண சான்றிதல் வழங்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே காணாமல் போன நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் வரை இந்த தொகை அந்த மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

வடக்கு - கிழக்கில் உள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எம்மிடம் உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு - கிழக்கில் உங்கள் அருகில் வைத்திருந்த அந்த நபர்கள் செய்த மோசடிகள், திருட்டுகள் காரணமாகவே நீங்கள் பாரிய தோல்வியை அந்தப் பகுதிகளில் சந்திக்க நேரிட்டது.

இன்றும் அதுதான் நடக்க போகின்றது. நிதியமைச்சரின் கட்சியை சேர்ந்த மூவரின் பெயரில் மட்டக்களப்பு மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் உள்ளது. பீ.சந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர். அடுத்தது, சதாசிவம் மயுரன் வியாழேந்திரனின் தம்பி, அடுத்தது, சிவனேசத்துறை சந்திரகாந்தன். இந்த தகவல்களை நாடாளுமன்றில் தான் நான் பெற்றுக்கொண்டேன்.

நாங்கள் நிதியமைச்சருடன் வடக்கு - கிழக்கு அபிவிருத்தி வேலைத்திடங்களில் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். எம்மிடம் சிறந்த முன்மோழிவுகள் உள்ளன. மாவட்ட ரீதியில் சில முன்மொழிவுகளை கூட எம்மால் வழங்க முடியாது உள்ளது. எனவே எமது திட்டங்களை முன்மொழிய எமக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தாருங்கள்  என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், Toronto, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கைதடி

29 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US