13 ஆவது சீர்திருத்தச் சட்ட மூலம் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் (video)
13 ஆவது சீர்திருத்தச் சட்ட மூலம் வடகிழக்கு வாழ் தமிழ் மக்களால் ஏகமனதாக நிராகரிக்கப்பட்ட ஒன்று எனவும் அது தொடர்பில் கதைத்துக் கொண்டிருப்பவர்களே முதலில் கதைப்பதை நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு தழுவிய ரீதியில் 8 மாவட்டங்களுக்கும் விஜயங்களினை மேற்கொண்டு, மக்களினுடைய சிவில் அமைப்புகளினுடைய மற்றும் பலதரப்பட்டவர்களுடனும் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றோம்.
மேலும் வடகிழக்கு வாழ் தமிழ் மக்களினுடைய அடிப்படை பிரச்சினைகளை கருத்தில் கொண்டும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் மரபு வழித்தாயகம், சுயநிர்ணயம், தமிழ் தேசியம் என்பனவே எங்களுடைய இலக்காக காணப்படுகின்றது.
ஆகவே மரபு வழித்தாயகம் சுயநிர்ணயம், தேசியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இதற்கு அடிபணிந்து கட்சி பேதமின்றி கொள்கைகள் வேறுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
