வழமைக்கு திரும்பிய மலையக மக்களின் இயல்பு வாழ்க்கை
நாடாளவிய ரீதியில் நடைபெறும் 'கோட்ட கோ கம' ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முடங்கியிருந்த மலையக பொது போக்குவரத்து இன்று (10) திகதி வழமைக்கு திரும்பியுள்ளது.
ஹட்டன் பகுதியிலிருந்து நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.
எனினும் இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுப்பட்டுள்ளன.
பொது போக்குவரத்து

ஹட்டனிலிருந்து தூர பிரதேசங்களுக்கு மிகவும் குறைந்த அளவு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையினால் பயணிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
போராட்டத்திற்கு ஆதரவு

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மலையக பகுதியில் அடைக்கப்பட்ட கடைகள் இன்று வழமைப்போல் திறந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
நேற்றை தினம் வெறிச்சோடி காணப்பட்ட நகரில் இன்று மக்கள் நடமாடுவதனை காணக்கூடியதாக உள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



