உக்ரைன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்த புடின்! அமெரிக்காவின் பக்கம் திரும்பிய கோபம்
Nord Stream 2 எரிவாயு குழாயின் கீழ் சந்தேகத்திற்குரிய பொருளை கண்டுபிடித்ததாக புடின் கூறியதை, டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
பால்டிக் கடலுக்கு அடியில் ரஷ்யாவையும், ஜேர்மனியையும் இணைக்கும் Nord Stream 1 மற்றும் Nord Stream 2 ஆகிய எரிவாயு குழாய்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியான வெடிப்புகளால் தாக்கப்பட்டன.
சர்வதேச பயங்கரவாதம்
இதனை சர்வதேச பயங்கரவாதம் என ரஷ்யா அழைத்தது. மேலும், Nord Stream குழாய்கள் வெடித்த இடத்தில் இருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் ஆன்டெனா போன்ற பொருளைக் கண்டுபிடித்ததாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குழாய்களில் மற்றொரு வெடிப்பு ஏற்படக்கூடும் என்று எச்சரித்த அவர், அந்த பொருள் வெடிக்கும் தன்மை கொண்டதாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் Nord Stream 2 குழாயின் கீழ் சந்தேகத்திற்குரிய பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லொக்கி ராஸ்முஸன் கூறுகையில், 'எங்கள் அதிகாரிகளின் மதிப்பீடு என்னவென்றால், இதனால் உடனடி பாதுகாப்பு ஆபத்து இல்லை. எனவே உயிருக்கோ அல்லது கப்பல் போக்குவரத்துக்கோ எந்த ஆபத்தும் இல்லை' என தெரிவித்துள்ளார்.
உக்ரைக் மீதான குற்றச்சாட்டை நிராகரித்த புடின்
மேலும், ரஷ்யாவில் உள்ள தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறிய அவர், ரஷ்யாவில் உள்ள எங்கள் தூதரகத்தின் மீதான நேரடி விசாரணையுடன் இது பின்பற்றப்பட்டது. நிச்சயமாக நாங்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம், அது விசாரிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
முன்னதாக, பால்டிக் கடலில் உள்ள Nord Stream எரிவாயு குழாய்களில், பிரித்தானியா வெடிகுண்டுகளை நடத்தியதற்கான ஆதாரங்களை நவம்பரில் ஒப்படைப்பதாக ரஷ்யா கூறியது. Nord Stream 2 என்பது ஐரோப்பாவிற்கு எரிவாயுவை வழங்குவதற்காக கட்டப்பட்டது, ஆனால் நேட்டோ நாடுகள் இறையாண்மை கொண்ட உக்ரைனின் மீது புடின் படையெடுப்பிற்கு பிறகு மாற்று விநியோகங்களைத் தேடுகின்றன.
அத்துடன் கடந்த ஆண்டு பால்டிக் கடலில் நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை சேதப்படுத்திய குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் உக்ரைனியர்கள் இருக்கலாம் என்ற ' முட்டாள்தனமான' குற்றச்சாட்டுகளை புடின் இன்று நிராகரித்துள்ளார், மேலும் மீண்டும் அமெரிக்காவை நோக்கி விரல் நீட்டுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.