மண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தரமற்ற உரங்கள் : விவசாயிகள் விசனம் (Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் மண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தரமற்ற உரங்களை பயிர்களுக்கு பயன்படுத்துவதால், பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்வதாக விவசாயிகளால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று (27-12-2021) காலை 10.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பிலும் சட்ட ரீதியற்ற பயிர் செய்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிலையில், விவசாய அமைப்புக்களின் சம்மேளத்தின் செயலாளர் முத்து சிவமோகன் இவை தொடர்பில் கலந்துரையாடும் போது, தற்போது மக்னீசியம் சல்பேற் (MAGNESIUM SULPHATE HEPTAHYDRATE) என்ற இவ் உரத்தை அமோனியம் சல்பேற் என சிலர் விற்பனை செய்கின்றார்கள். விவசாயிகள் இவ் உரத்தை வாங்கி வயலில் பயன்படுத்தியுள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.
இதன்போது இது தொடர்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.
இதை அடுத்து கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு அறிவிப்புகளை வழங்குவதற்கும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட துறைசார் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
