இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த அரச சார்பற்ற அமைப்பு
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தமது அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை செயல்படுத்துவதை தடுக்கும் உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு எதிராக, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA) கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இந்த இடைக்கால உத்தரவை, ஜூலை 27 ஆம் திகதியன்று, நாடாளுமன்றில் பிரதமரின் அறிக்கையின் மூலம் அரசாங்கம் வெளிப்படையாக நிராகரிததjது
இது, இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியை நோக்கிச் செல்கிறதா என்ற எச்சரிக்கையை எழுப்புகிறது.
பொருளாதார மீட்சி
எனவே அந்த நிலைமைக்கான எந்தவொரு நடவடிக்கைகளிலிருந்தும் விலகுமாறு ஜனாதிபதியை, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டிருப்பதன் பின்னணியில், அரசமைப்புச் சட்டத்தை கடைப்பிடித்து தேர்தலின் நேர்மையை மதித்து நடக்க வேண்டியது, அரசாங்கம் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் கடமையாகும்.
இந்தநிலையில், தேர்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும், ஜனநாயகத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும்.
அத்துடன், பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய இலங்கையின் பாதையில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் மாற்று கொள்கைளுக்கான மையம் எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 20 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
