இலங்கையில் அதிகரிக்கும் தொற்றா நோய்கள் : சுகாதார அமைச்சின் துரித நடவடிக்கை
இலங்கையில் தற்போது தொற்றாத நோயாளர்களி்ன் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
காலி - யக்கலமுல்லையில் இன்று (23.03.2024) இடம்பெற்ற நடமாடும் மருத்துவ சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "நாடு முழுவதும் தொற்றாத நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
சுகாதார அமைச்சு
எனவே, முன்கூட்டிய கண்டறிதல் மற்றும் தலையீட்டின் நோக்கத்துடன், அடையாளம் காணப்பட்ட நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்புவதை சுகாதார அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதே நேரம், இந்த ஆண்டு நடமாடும் மருத்துவ சேவை போன்ற திட்டங்கள் மூலம் கிராமப்புற சமூகங்களுக்கான சுகாதார சேவையை விரிவுபடுத்த சுகாதார அமைச்சு முயல்கிறது." என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 9 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
