யாழ்.மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் இளையோர் அணி வேட்புமனு தாக்கல்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இன்று (புதன்கிழமை) மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் யாழ்.மாநகர சபை முன்னாள் மேயர் வி.மணிவண்ணன் (சட்டத்தரணி), தவச்செல்வம் சிற்பரன் (கட்டட கலைஞர், தமிழ் மக்கள் கூட்டணி சிரேஷ்ட உறுப்பினர்), மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் (தமிழரசுக் கட்சி கொழும்பு மாவட்ட கிளையின் முன்னாள் உப தலைவர் மற்றும் மகளிர் அணி உறுப்பினர், யாழ் பல்கலைக்கழக பட்டதாரி), வரதராஜா பார்த்திபன் (யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மற்றும் யாழ் எயிட் தொண்டு நிறுவன சிரேஷ்ட தலைவர்), நாவலன் கோகிலவாணி (முன்னாள் போராளி, நிர்வாக இயக்குநர், தொழில்முனைஞர் மற்றும் மொழி பெயர்ப்பாளர்), அருள்பரன் உமாகரன் (சட்டத்தரணி, கவிஞர் மற்றும் முன்னாள் தமிழரசு கட்சி உறுப்பினர்), பிரான்சிஸ் குலேந்திரன் செல்ரன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர், யாழ் பல்கலைக்கழக பட்டதாரி), முருகானந்தன் யசிந்தன் (ஆசிரியர், கோண்டாவில் இந்துக்கல்லூரி), கதிரேசன் சஜீதரன் (பிராந்திய இயக்குனர், ஆர்பிகோ நிறுவனம்), ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் பதிவு செய்யப்பட்ட மான் சின்னத்தில் இவர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி முன் வேட்பாளர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அரசியலில் இளையோருக்கு இடமளிக்கும் வகையில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் ஆனால் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தங்கியிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவிருப்பதாகவும் மூன்று வாரங்களுக்கு முன்னர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam