அம்பாறையில் 21 அரசியல் கட்சிகளினது நியமன பத்திரங்கள் ஏற்பு
அம்பாறை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 21 அரசியல் கட்சிகளினதும் 43 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2024 ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நியமனப்பத்திரங்கள் தாக்கல்
மேலும் தெரிவிக்கையில், “அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 5,55,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பிரகாரம் 2024.10.04 தொடக்கம் 2024.10.11 வரையான காலப்பகுதியில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 07 ஆசன தெரிவிற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 22 மற்றும் சுயேட்சைக்குழுக்கள் 50 இனதும் நியமனப்பத்திரங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.
அத்துடன் நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்த அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியும் 07 சுயேட்சைக்குழுக்களையும் தேர்தல் சட்ட திட்டங்களுக்கமைய பல்வேறு குறைபாடுகளை கருத்திற் கொண்டு நிராகரித்துள்ளோம்.
வன்முறையற்ற நீதியான தேர்தல்
இதன்படி தற்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 21 உம் சுயேட்சைக்குழுக்கள் 43 இனது நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொண்டுள்ளோம்.
மொத்தமாக 64 அரசியல் கட்சி உட்பட சுயேட்சைக்குழுக்கள் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக போட்டியிடுகின்றன.
இந்நிலையில், வன்முறையற்ற நீதியான தேர்தல் ஒன்றினை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவும் தெரிவத்தாட்சி அலுவலருமான நானும் பொதுமக்களின் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம்” எனவும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 22 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
