அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு நோபல் பரிசு
தொடு உணர்வின் இரகசியங்களைக் கண்டறிந்தமைக்காக, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு, உடலியல் அல்லது மருத்துவத்திற்கான, 2021 நோபல் பரிசு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உடலியல் நிபுணர் பேராசிரியர் டேவிட் ஜூலியஸ் மற்றும் கலிபோர்னியாவின் லா ஜொல்லாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியின் நரம்பியல் நிபுணர் பேராசிரியர் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோர், உயிர் வாழ முக்கியமான, சருமத்தில் வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் போன்ற உணர்வுகளைக் கண்டறிந்ததற்காக, இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டொக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் நோபல் சபையால் இன்று அறிவிக்கப்பட்ட இந்த விருது, 845,000 பவுண்ட்ஸ் மதிப்புடையது. இந்த தொகை வெற்றியாளர்களிடையே சமமாகப் பகிரப்படும்.
வெப்பநிலை மற்றும் இயந்திர சக்தியை உணருவதற்கான மூலக்கூறு அடிப்படையை விளக்கி இயற்கையின் இரகசியங்களின் ஒன்றான தொடு உணர்வு கண்டறியப்பட்டுள்ளது.