பாதாள உலக செயற்பாடுகளுக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் தொடர்பில்லை
பாதாள உலக செயற்பாடுகளுக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் தொடர்பு கிடையாது என பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொன்டா தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது எனவும் நூற்றுக்கு நூறு வீதம் அதனை உறுதியாக கூற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழு செயற்பாடுகள் என்பது தேசியப் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புயடைதல்ல எனவும் அதனை பொதுப் பாதுகாப்பு அமைச்சு கட்டுப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பினை பொலிஸாருக்கு வழங்கி வருகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் அதனை காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழு செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதனால் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam