கொழும்பில் குண்டுத் தாக்குதல் குறித்த செய்திகளில் உண்மையில்லை! பொலிஸார்
கொழும்பின் முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டின் மீதும், வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, மிரிஹான, நுகேகொட, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய இடங்களிலும் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த சமூக ஊடகப் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வதந்திகளில் உண்மையில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சாவேந்திர சில்வாவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த செய்திகள் மாற்றம் செய்யப்பட்டு மீள் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 15 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
