இந்திய, பாகிஸ்தான் வெடிப்புச் சம்பவங்களினால் இலங்கைக்கு அச்சுறுத்தலா..
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு
இலங்கையில் புலனாய்வு பிரிவினர் மிகுந்த கூர்மையாக செயல்பட்டு வருவதாகவும் இதனால் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பாக முப்படையினரும் பொலிஸாரும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதி கூடிய கவனத்தை செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகம்
இதேவேளை, போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் சிலர் அந்த தொழில்களில் இருந்து விடுபட விரும்புவதாக தெரிவித்துள்ளனர் என தாம் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார் .
போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் அந்த நடவடிக்கையில் இருந்து விடுபட விரும்புவது ஆரோக்கியமான விடயமே என அவர் தெரிவித்துள்ளார்.
பாதாள உலக குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு வர ஆர்வமாக இருக்கின்றார்கள் என தாம் குறிப்பிடவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam