வரி விதிப்பில் அதிர்ச்சி வைத்தியம் வேண்டாம்! அரசாங்கத்திடம் கோரிக்கை
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பு முறையானது, வரி செலுத்துவோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, இலங்கையில் வசிக்கும் 22 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகைக்கு மில்லியன் கணக்கில் வருமான வரிக் கோப்புகள் இருக்க வேண்டும்.
எனினும் உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்திடம் 292,305 வருமான வரிக் கோப்புகள் மட்டுமே உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் நாட்டின் நிதி நெருக்கடியை வழிநடத்துபவர்கள், குடிமக்கள் சந்திக்கும் நிலைமையின் தீவிரத்தை உணரவில்லை சமையல் எரிவாயுவுக்கான வரிசைகளை நீக்குவதும், எரிபொருள் பற்றாக்குறைக்கு ஓரளவு தீர்வளிப்பதும் தவறான இயல்புநிலையை அளித்துள்ளதாக தேசிய நாளிதழ் ஒன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்போக்கான நடவடிக்கைகள் அவசியம்
அரச துறையினர் பொருட்களை வழங்குவதில் தோல்வியடைந்துள்ளமையால் மக்கள் சோர்ந்து போயுள்ளனர்.
வருவாய் சேகரிப்பாளர்கள்,வரிக் கோப்புகளை வைத்திருப்பவர்களை மாத்திரமல்லாமல், பரந்த அளவிலான வரி செலுத்தாதவர்களை வலைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
மறுபுறம், வரி விதிப்பு என்பது ஒரே இரவில் அதிர்ச்சி வைத்தியத்துக்கு (ஷொக் ட்ரீட்மென்ட) உட்படுத்தப்படாமல் முற்போக்கான நடவடிக்கைகளாக இருக்க வேண்டும்.
பொதுமக்கள் செலுத்தும் திறனுக்கு மேல் வரி விதிப்பதன் மூலம் எந்த நாடும் முன்னேற முடியாது.
மேலும் வரிப்பணத்தில் வசூலிக்கும் பணம் சமயோசிதமாக செலவழிக்கப்படுவதைப் பார்ப்பது அரசின் கடமையாகும் என்றும் தேசிய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.