ரணில், மகிந்த சந்திப்பு - வெளியானது ஐக்கிய தேசியக் கட்சியின் அறிவிப்பு
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை எதுவுமில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார் எனவும் இதில் எதனையும் மறைக்க வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் - மஹிந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் அயலவர் ஒருவரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்றில் மஹிந்தவும், ரணிலும் பங்கேற்றனர் எனவும், கொழும்பு 3இல் இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது எனவும் தெரிவித்துள்ளது.
அரசியல் விவகாரங்கள் எதுவும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவில்லை எனவும், குறிப்பாக பிரதமரின் கீழ் வரும் நிறுவனங்கள் தொடர்பில் பேசப்படவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.



