நாட்டின் அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் விவசாய அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த பெரும்போகத்தில் போதுமான அளவு அறுவடை கிடைத்துள்ளதால், எதிர்வரும் இரண்டு போகங்களுக்கும் தேவையான நெல் கையிருப்பில் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாரியளவு நெல் அறுவடை
அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுபோகத்தில், 5 இலட்சத்து மூவாயிரம் ஹெக்டெயாரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. எனவே, ஒரு இலட்சம் ஏக்கர் பயிர்ச்சேதம் ஏற்பட்டாலும், எந்தவொரு அரிசி தட்டுப்பாடும் ஏற்படாது.
மேலும், கடந்த பெரும்போகத்தில் பாரியளவாக நெல் அறுவடை செய்யப்பட்டதால், அடுத்து வரும் பெரும்போகம் மற்றும் சிறுபோகங்களுக்கு தேவையான நெல் எம்மிடம் கையிருப்பில் உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |