அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை! - எல்லே குணவங்ச தேரர்
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட எவருக்கும் நிவாரணங்கள் கிடைக்கவில்லை என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள எந்த நிறுவனங்கள் குறித்தும் தற்போது மீளாய்வுகள் செய்யப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி பேசக்கூட எவரும் இல்லை. பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களும் எவரும் இல்லை.
கிராமங்களில் வாழும் அப்பாவி வறிய மக்கள் செய்வதறியாது கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரிசி விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறிய போதிலும் இந்த விலைக்கு எங்கும் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் மக்கள் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுக்கு மத்தியில் மக்கள் மிகவும் பொறுமையுடன் செயற்பட்டாலும் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியாளர்களிடம் இந்த நிலைமையை காண முடியவில்லை எனவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan