இந்த வருடம் மாகாண சபை தேர்தல் இல்லை! அமைச்சரின் அறிவிப்பு
சில சட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால் இந்த வருடம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
பாணந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டு விடும் என்பதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்கள்
அத்துடன், அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தொடர்ந்தும் தேர்தல்களை நடத்த முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சில சட்டங்கள் மாற்றப்பட வேண்டியிருப்பதையும் குறித்த தீர்மானத்துக்கான முக்கிய காரணமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
