இரசாயன உரங்களுக்காகப் போராடுவதில் எந்தப் பயனும் இல்லை! - அரசாங்கம்
எந்த உரத்தையும் வழங்குமாறு கேட்ட விவசாயிகள் தற்போது இரசாயன உரங்களை மட்டுமே கேட்கிறார்கள் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய தற்போது நேரம் இல்லை, அந்த உரங்களை இறக்குமதி செய்ய குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இரசாயன உரங்களுக்காக போராட்டம் நடத்துவதில் எந்த பயனும் இல்லை,
சிலர் அதை அரசியலாக்க முயற்சிக்கின்றனர் என அமைச்சர் தெரிவிவித்துள்ளார். இந்த நேரத்தில் இரசாயன உரங்களுக்காகப் போராடுவதில் எந்தப் பயனும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கரிம உரங்களைப் பயன்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என்று பொறுப்புடன் தெரிவிப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
