சஜித் பிரேமதாஸவே தகுதியான வேட்பாளர் : சமிந்த விஜேசிறி
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி நிறுத்த வேண்டிய தகுதியான வேட்பாளர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி(Chaminda Wijesiri) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியும் சில கருத்து முரண்பாடுகளுடன் இருப்பதாக கூறியுள்ள அவர், அனைவரும் இணைந்து சஜித் பிரேமதாசவை பெற்றிப் பெற செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை விடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி, மற்றுமொரு அணியை இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவிற்கு சென்றால், தான் அதனை எதிர்க்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஹேசா விதானகே ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து விலகி, கட்சிக்குள் இருக்கும் சிலருக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அப்படி இருந்தாலும் கட்சிக்குள் எந்த பிளவுகளோ சிதறல்களோ இல்லை என சமிந்த விஜேசிறி சுட்டிக்காட்டியுள்ளார். சில தரப்பினர் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ள அவர், அவர்கள் யார் என்பதை கூறவில்லை.
வாராந்த சிங்கள பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் சமிந்த விஜேசிறி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan