சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு கட்சியில் இடமில்லை! - ருவான் விஜேவர்தன
சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக அல்லது குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபருக்கும் கட்சியில் உறுப்புரிமை வழங்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் அவர்களின் பதவிகளைப் பொருட்படுத்தாமல் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவன் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து நபர்களும் தண்டிக்கப்பட வேண்டும். அத்தகைய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
எவ்வாறாயினும், அரசியல் பேதமின்றி இதுபோன்ற குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
