பெட்ரோல் இல்லை! வரிசையில் காத்திருப்பதால் பயனில்லை : வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கென வரிசைகளில் இனி காத்திருப்பதில் பயனில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
வரிசையில் காத்திருப்பதில் பயனில்லை
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கையிருப்பில் இருந்த பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் பெட்ரோலுக்காக வரிசையில் நிற்பதில் எந்தப் பயனும் இல்லை என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
வார இறுதி நாள் என்பதால் திங்கட்கிழமை வரை எரிபொருள் போக்குவரத்து நடைபெறாது என்றும் நாளை முதல் டீசல் கொண்டு செல்லப்படும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சேமிப்பகத்தில் எஞ்சியிருக்கும் 1000MT பெட்ரோல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
