முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் நீக்கம்! வழங்கப்பட்ட அனுமதி
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1986ஆம் ஆண்டு 4ம் இலக்க மற்றும் 1977ஆம் ஆண்டு 1ம் இலக்க சட்டங்களை திருத்தி, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குக் கிடைக்கும் விசேட நலன்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் வழங்கப்படும் ஓய்வூதியத்தையும் நீக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமைச்சரவை அனுமதி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் பிரசாரத்தில் வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற கொள்ளை பிரகடனம் ஊடாக இந்த சலுகை குறைப்பு குறித்து அறிவித்திருந்தது.
இந்த நலன்களை நீக்கும் வகையில் இரண்டு புதிய சட்டமூலங்களை தயாரிக்க நீதித்துறை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான சட்ட வரைவுகள் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 12 மணி நேரம் முன்

அம்மா என சொன்ன கிரிஷ், வசமாக சிக்கிக்கொண்ட ரோகிணி.. சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
