ஜே.வி.பி.நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானம் குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது! தேவானந்த சுரவீர எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், கொடுப்பனவுகளை கட்சியின் பொது நிதியில் வைப்பிலிடும் ஜே.வி.பி.நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானம் குறித்து யாரும் கேள்வியெழுப்ப முடியாது என்று தேவானந்த சுரவீர எம்.பி. விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜே.வி.பி. கட்சி சார் மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவுகள் கட்சியின் பொதுநிதியில் வரவு வைக்கப்பட்டு, பொது வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி
எங்களுக்கு கிடைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எங்களுக்கானது அல்ல, பொதுமக்களுக்கானது. அந்த வகையில் பொதுவேலைத்திட்டங்களுக்காக நாங்கள் சுயவிருப்பத்துடன் எங்களுக்கான சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை கட்சி நிதியில் வைப்புச் செய்கின்றோம்.
அதனை யாரும் கேள்விக்குட்படுத்தவோ, சவாலுக்குட்படுத்தவோ முடியாது.
அந்த விடயம் தொடர்பில் வெளியிடும் தவறான கருத்துக்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் எங்கள் பயணத்துக்கு இடையூறு செய்ய முடியாது. தடுக்கவும் முடியாது என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam
