ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி எவராலும் ஆட்சி அதிகாரத்தை நீடிக்க முடியாது:ஜே.வி.பி
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் பலமிக்க தரப்பினர் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
பிலியந்தலை வெவெல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய கல் வீச்சு மற்றும் மல கழிவு தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக அந்த கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத்,
வெள்ளை வானில் சென்றவர்கள் வீடமைப்புத் தொகுதியின் பாதுகாப்பு அதிகாரியின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தி விட்டு, வாயில் கதவை திறந்து, உள்ளே சென்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இலங்கையின் அரசியல் சம்பந்தமான விடயங்களை சர்ச்சைக்குரிய வகையிலான ஊடக நிகழ்ச்சியை வழங்கி வரும் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது நடத்திய தாக்குதலை மக்கள் விடுதலை முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.
அவரது சமூக ஊடக நிகழ்ச்சிகள் காரணமாக அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட ஊழல் அரசியல்வாதிகள், அதனுடன் தொடர்புடைய கறுப்பு வர்த்தகர்கள் பலர் பற்றிய தகவல்கள் சமூகத்திற்கு தெரியவந்துக்கொண்டிருந்தது.
இப்படியான நிலையில் அவரது வீட்டின் மீதான தாக்குதலான அவரது ஊடக பயன்பாட்டின் பிரதிபலன் என்பதுடன் அதனை அச்சுறுத்தி தடுக்கும் நடவடிக்கையாகும் என்பது தெளிவானது.
குறிப்பாக தலைநகருக்கு அருகில் உள்ள பிரதேசம் ஒன்றில் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த வீடமைப்புத் தொகுதிக்குள் ஆயுதங்களுடன் இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் செல்ல முடிந்துள்ளது.
இதனால், தாக்குதல் நடத்த வந்த அணியினரின் பின்னணியில் பலமிக்க நபர்கள் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பாதுகாப்பு வழங்கும் போர்வையில் அரசாங்கம் ஆயுதங்களுடன் குழுக்களை பராமரித்து வரும் நிலைமையில் இவ்வாறான சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை.
இந்த மோசமான தாக்குதலின் பொறுப்பில் இருந்து அரசாங்கத்தால் எந்த வகையில் விடுபட முடியாது என்பதை வலியுறுத்துகிறோம். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகிறோம்.
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, உண்மையை மறைத்து தமது ஆட்சி அதிகாரத்தை நீடித்துக்கொள்ள எந்த ஆட்சியாளர்களுக்கும் முடியாமல் போனது.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தி, தாக்கிய பல சம்பவங்கள் நாங்கள் கண்டுள்ளோம். இந்த சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடைய குற்றவாளிகள், அவர்களின் பின்னணியில் இருந்து இயக்கியவர்கள் சட்டத்திற்கு முன்னால் நிறுத்தப்படவில்லை.
எனினும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாத இந்த சம்பவங்களின் பின்னணியில்கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற கடும் நம்பிக்கை மக்களுக்குள் இருக்கின்றது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 6 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri