இனிமேல் எவரும் பொய்கூறி ஆட்சியைப் பிடிக்க முடியாது! முன்னாள் அமைச்சர் கிரியெல்ல சுட்டிக்காட்டு
இனி எவரும் பொய்கூறி ஆட்சியைப் பிடிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, மன்னர் ஆட்சிக் காலத்தில் இலங்கையானது தன்னிறைவடைந்த நாடாகவே இருந்தது. 1815 இல் கடைசி மன்னனின் ஆட்சிக் காலத்தில்கூட நாடு சிறப்பாகவே இருந்தது.
பொய் வாக்குறுதி
வெளிநாடுகளில் தங்கி இருக்க வேண்டிய நிலை இருக்கவில்லை. சுதந்திரத்தின் பின்னர்கூட 1950 வரை இலங்கை வெளிநாட்டுக் கடன் பெறவே இல்லை.

2ஆம் உலகப் போரின்போது பிரிட்டனுக்கே கடன் கொடுத்தது எமது நாடு. ஆனால், இன்று வெளிநாடுகளைத் தங்கி இருக்க வேண்டிய நிலை உள்ளது.
பொய் வாக்குறுதி அரசியல் கலாசாரம் வந்த பின்னரே இந்த நிலை ஏற்பட்டது. இனி பொய் கூறி ஆட்சிக்கு வருவது சாத்தியமற்ற விடயமாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.