யாழில் கட்டுப்பணம் செலுத்திய சுயேட்சை குழு ஒன்று வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை:வெளியானது தகவல்
யாழ்.மாநகர சபையில் மட்டும் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தைச் செலுத்திய சுயேச்சை குழு ஒன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வராத சம்பவம் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (21.01.2023) இடம்பெற்றுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
வேட்பு மனுத் தாக்கல்
அதன்பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த யாழ்
மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர், "7 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் சில
உள்ளூராட்சி மன்றங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 16 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்திய நிலையில் 15 சுயேட்சைக் குழுக்கள் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.
ஒரு சுயேச்சைக் குழு கட்டுப்பனத்தை செலுத்தி விட்டு வேட்பு மனுத் தாக்கல்
செய்ய வரவில்லை.”என கூறியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
