கீதநாத் அரசியல் பழக விரும்பலாம் ஆனால் மக்களை குழப்பக்கூடாது: அங்கஜன் இராமநாதன்

Government Jaffna Journalist Ankajanramanathan
By Kanamirtha Mar 04, 2022 03:35 PM GMT
Report

பிரதமரின் அமைப்பாளரான கீதநாத் காசிலிங்கம் அரசியல் பழகுவதற்கு ஆர்வமாக இருந்தால் மக்களைக் குழப்பாமல் அரசியல் பழகுமாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

''பிரதமர் இணைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதமரின் பிரதி நிதியாகக் கலந்து கொள்வதற்கான கடிதம் எனக்கு கிடைத்தது. அதனை நான் வரவேற்கிறேன்.

ஏனெனில் இயன்றவரை மக்கள் பிரச்சனை தீர்ப்பதற்காகவே மக்களிடம் ஆணை பெற்றோம். அதனை விரைவு படுத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் சில ஊடகங்களில் கீதநாத் தெரிவித்ததாக சில விடயங்கள் மிகைப்படுத்தி செய்திகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஏனெனில் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் செயற்பாடுகளைப் பிரதமர் அலுவலகம் கட்டுப்படுத்தப்போகிறது என்ற தோரணையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்களுடன் கலந்துரையாடினேன். அவர்கள் இந்த செய்தியை குறித்த நபர் தான் தெரிவித்ததாகக் கூறினார்கள்.

குறித்த நபர் ஏற்கனவே விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் முகநூலை ஒத்த முகப்பு புத்தகத்தில் சில விடயங்களைத் தவறாகப் பதிவேற்றம் செய்தவர்.

கீதநாத் காசிலிங்கம் பற்றி பலர் அறிந்திருப்பார்கள், நான் அதனை விரிவாகப் பேச விரும்பவில்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் நாமல் ராஜபக்சவின் இணைப்பாளராகக் கடமையாற்றிய நிலையில் நாமல் ராஜபக்சவின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தார்.

அவர் ஏன் பதவி நீக்கப்பட்டார், என்ன செய்தார் என்பதை அவரிடமே கேளுங்கள். நான் மக்கள் கூட்டத்தை இன்று, நேற்று கண்டவன் அல்ல. நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபடியான தமிழ் வாக்குகளால் வென்றவன்.

சிலர் அரசியலுக்கு ஆசைப்பட்டு சில ஊடகங்களைப் பயன்படுத்தி எனது மக்கள் செல்வாக்கைக் குறைத்து விடலாம் என தப்புக் கணக்குப் போட்டுள்ளனர்.

அண்மையில் கரவெட்டியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாட்டில் அணி திரண்ட மக்கள் கூட்டத்தைப் பார்த்து அரசியல்வாதிகள் சிலருக்குப் பயம் ஏற்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் தமது சுயலாப அரசியலைச் செய்ததன் விளைவே சிலர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அவ்வாறானவர்கள் அரசியல் பழக விரும்பும் கீதநாத் போன்றவர்களை வைத்து எனது அரசியலைத் தடுத்துவிடலாம் என தப்புக்கணக்கு போடுகின்றனர்.

நான் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் மத்தியில் வந்தவன். மக்களின் ஜனநாயக வாக்குகளால் யாழ் தேர்தல் தொகுதியில் தேசியக்கட்சியில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றவன்.

ஆகவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி மக்களின் ஆணையுடன் தொடர்ந்தும் பயணிப்பேன்.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு, அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து போராட்டத்தை நடத்துவோர் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த போது ஏன் இந்த சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் வந்துவிட்ட நிலையில் சிலரைத் தேசியவாதிகளாகக் காட்டுவதற்காகவே இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகிறது. நான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறவன் என்ற நீதியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டாம் எனக் கூறவில்லை நீக்கவேண்டும் என்றே கூறுகிறேன்.

ஆகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கையிலெடுத்து மாகாணசபை தேர்தலுக்கான ஒத்திகை பார்ப்பதைத் தமிழ் தரப்புகள் நிறுத்த வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US