தேர்தலை ஒத்திவைக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை-பிரசன்ன ரணதுங்க
அரசாங்கத்திற்கோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கோ உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித தேவையும் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கம்பஹா மாவட்ட வேட்புமனுக்களின் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தலுக்கான நிதியை தேடிக்கொள்ள வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான நிதியை தேடிக்கொள்ள வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சுகளுக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்த தேவையான நிதி இருப்பதன் காரணமாகவே தேர்தல் ஆணைக்குழு தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரியிருக்கலாம்.
ஏனைய கட்சிகளை விட எங்களிடம் வலுவான அணி இருக்கின்றது
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கமும், பொதுஜன பெரமுனவும் சூழ்ச்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.தேர்தலை சந்திப்பதற்கான எவ்வித அச்சமும் அரசாங்கத்திற்கோ, மொட்டுக்கட்சிகோ இல்லை.
ஏனைய அரசியல் கட்சிகளை விட வலுவாக தேர்தலை எதிர்கொள்ளக்கூடிய அணி எங்கியடம் இருப்பதால், அரசாங்கத்திற்கோ, மொட்டுக்கட்சிகோ இம்முறை தேர்தலில் எவ்வித சவால்களும் இல்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
